FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 24, 2016, 07:59:23 PM

Title: ~ வாய்ப்புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக் கீரை மண்டி ~
Post by: MysteRy on June 24, 2016, 07:59:23 PM
வாய்ப்புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக் கீரை மண்டி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fman-6.jpg&hash=5d8ee049c50ecde7539db9aaf86f2417cfedd27b)

தேவையான பொருட்கள் :

மணத்தக்காளிக் கீரை – ஒரு கட்டு,
சின்ன வெங்காயம் – 10,
பூண்டு – 6,
கெட்டியான முதல் தேங்காய்ப் பால் – அரை கப்
இரண்டாம் பால் – அரை கப்,
அரிசி கழுவிய தண்ணீர் (மண்டி) – அரை கப்,
உப்பு – ருசிக்கேற்ப.

தாளிக்க:

எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 1,
வெந்தயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

* கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
* குக்கரில், எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் சிறிது வதங்கியதும் இரண்டாம் பால், அரிசி மண்டியைச் சேர்த்து, உப்பு போட்டு, நன்றாகக் கொதிக்கவிடவும்.
* இதில் கீரையைப் போட்டு, மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கி, முதல் பாலைச் சேர்க்கவும்.
* ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்பு:

இந்த மண்டியை, சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண்ணுக்கும் இது நல்லது.