FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 24, 2016, 07:34:43 PM

Title: ~ உருளைக் கிழங்கு பிரட் மசாலா வடை ~
Post by: MysteRy on June 24, 2016, 07:34:43 PM
உருளைக் கிழங்கு பிரட் மசாலா வடை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fpo-1.jpg&hash=db9eafa1535e05535e83a564bb5c138f925668ec)

தேவையான பொருட்கள்

பிரெட் ஸ்லைஸ் – 6
எண்ணெய் (அ) வெண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
பெரியவெங்காயம் – 1 பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய் – 2
இஞ்சி , பூண்டு பொடித்தது – தலா 1 டீஸ்பூன
குடைமிளகாய் பொடித்தது – கால் கப்
கார்ன்ஃப்ளார் – தேவைக்கேற்ப
மைதா, மிளகாய்தூள் – தேவைக்கேற்ப
மல்லித்தூள் – சிறிது
எள் – சிறிது
வேக வைத்து மசித்த
உருளைக்கிழங்கு – 2
துருவிய பனீர் – அரை கப்
அலங்கரிக்க – சாஸ்
எள், எண்ணெய் – பொரிப்பதற்கு

எப்படிச் செய்வது?

பூரணத்துக்கு…

மசித்த உருளைக்கிழங்குடன் துருவிய பனீர், பொடித்த இஞ்சி, பூண்டு, மல்லித்தழை, வெங்காயம், பச்சைமிளகாய், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு, குடமிளகாய் (எல்லாம் மிகப் பொடியாக இருக்க வேண்டும்) எல்லாவற்றையும் சேர்த்து சிறிது எண்ணெய் (அ) வெண்ணெயில் வதக்கிக்கொள்ளவும். இதுதான் பூரணம். பிரெட்டை வட்டமாக கட்டரில் வைத்து வெட்டிக்கொள்ளவும். பின் மைதா, கார்ன்ஃப்ளாரை கரைத்துக்கொண்டு பிரெட் வட்டத்தை இந்தக் கரைசலில் முக்கி எடுக்கவும். அதில் பூரணத்தைப் பரப்பி எள் தூவி, காய்ந்தவுடன் எண்ணெயில் பொரிக்கவும். சாஸ் உடன் பரிமாறவும்.