FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on January 27, 2012, 11:35:23 AM
-
எப்போதும் ஒரே மாதிரியான பொலிவான தோற்றம், ஒரு விதமான கவர்ச்சி முதலியவை மாறாமல் இருக்க டெப்பிமூர் என்ற அமெரிக்கர் சக்தி வாய்ந்த நடைமுறைத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார். பைன் ஆப்பிள் என்ற புகழ்மிக்க ஸ்டுடியோவை உருவாக்கியவர் இவர்தான். மேரி ஹெல்வின், கிளிப் ரிச்சர்ட் போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள் இவருடைய திட்டத்தைப் பின்பற்றி ஒரே மாதிரியான பொலிவான தோற்றத்தை இன்றுவரை பெற்று வருகின்றனர். டெப்பிமூர் என்ற இந்தப் பெண்மணி தரும் ஐந்து சக்தி வாய்ந்த குறிப்புகளை நடைமுறையில் பின்பற்றி வந்தால் ஆண்களும் பெண்களும் எப்போதும் சுறுசுறுப்புடனும் வயதாவது தெரியாமலும் வாழ முடியுமாம்!
ஐந்து வழிகள்
முதல் வழி
சாப்பாட்டை இவ்வளவு கலோரிகள் என்று கணக்கிட்டு சாப்பிட வேண்டாம் ‘போதும்' என்று உங்களுக்கே தெரியும். அப்படி உணரும் அளவே சாப்பிடுங்கள். இனிப்பு, கொழுப்பு முதலியவற்றை ஓரளவு குறையுங்கள். கேக் மற்றும் இனிப்பு வகைகளை முற்றிலும் தவிர்க்கவும். வெண்ணெய், கிரீம் அயிட்டங்கள், வறுவல் வகைளையும் தவிர்ப்பது மிகவும் நல்லது. மாதத்தில் ஒரு நாள் ஒன்றிரண்டு இனிப்புச் சாப்பிடுவதில் தவறில்லை!
உலக அழகி ஐஸ்வர்யா ராய் சாப்பாட்டிலும், உடற்பயிற்சியிலும், சாதாரணமானவர்களைப் போன்ற பழக்க வழக்கங்களையே கொண்டிருக்கிறார்.
கண்டிப்பான சிறப்பு உணவுக் கட்டுப்பாடு உடற்பயிற்சி போன்றவை இவரிடம் இல்லை. இருந்தும் இவர் ஒரே மாதிரியாகத் தோற்றம் தர முக்கியமான காரணம், இனிப்பு வகைகளைக் குறைத்துக் கொள்வதுதான்.
இரண்டாவது வழி
உப்பைக் குறையுங்கள். உப்பு, கொழுப்பு செல்களில் நன்கு அகப்பட்டுக் கொண்டு விடுகிறது. மேலும் உப்பு உடலில் அதிகம் சேரச்சேரச் சேமிப்பாகவும் தங்கி விடுகிறது. கொழுப்பு செல்களில் சேர்ந்து சிறு கண்ணறைகளை புதிதாக உருவாக்கி உடலைப் பருமனாக்கிவிடும். எனவே, உப்பைத் தவிர்ப்பதே மிகவும் நல்லது.
மூன்றாவது வழி
உடல் உறுப்புகள் வாரத்தில் ஒரு நாளாவது எளிதாக இயங்கப் பழங்கள் மடடுமே சாப்பிடுங்கள். குறிப்பாக, திராட்சைப் பழம், முலாம் பழம் சாப்பிடுவது நல்லது. சாறாகவும் இவற்றை அருந்தலாம். உடலில் உள்ள நோய் நுண்ம நச்சுப்பொருட்களையும், அழுகலான நச்சுக்கூறுகளையும் இப்பழங்கள் வெளியே தள்ளிவிடும். தேவைப்படும் மற்ற வகையான பழங்களையும் போதுமான அளவு சாப்பிடுங்கள். இதன் பயனை மறுநாள் நீங்கள் நன்றாக உணரமுடியும். உடலும் மனமும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.
நான்காவது வழி
எடையைக் குறைக்க வேண்டும் என்றால் கொஞ்சம் கூடுதலாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். கால் கை மூட்டுகளுக்கு அதிகம் சிரமம் தராத உடற்பயிற்சி வகைகளை நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து செய்யலாம். இல்லை எனில் நீச்சல் பயிற்சி செய்யவும், துரித நடை, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஒட்டுதல் ஆகியவற்றுள் ஒன்றையேனும் வாரத்திற்கு மூன்று முதல் ஐந்து நாட்களாவது பின்பற்ற வேண்டும். இதனால் உடல் எடை, தோற்றம் முதலியன அப்படியே மாறாமல் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக இருக்கும்.
ஐந்தாவது வழி
இது மிக முக்கியமானது, தசைநார்களை நிமிர்த்தும் உடற்பயிற்சி. காலையில் எழுந்ததும் ஒரு கயிற்றைப் பிடித்துக்கொண்டு அதில் ஏறுவது போல இரண்டு கைகளையும் நேராகத் தூக்கியபடியே கற்பனையில் ‘ரோப் கிளைம்பிங்' செய்யுங்கள். இப்படிச் செய்யும்போது உங்கள் முதுகுத்தண்டும் கைகளும் மாபெரும் பலத்தையும் சக்தியையும் பெறும். இரண்டாவது விதியைக் கவனமாகப் பின்பற்றினால் இந்த ஐந்தாவது விதியின் மூலம் கிடைக்கும் நன்மை அபாரமாக இருக்கும்.
தொந்தி விழுதல், உடல் பருமனாவது முதலியவற்றை இந்த ஐந்து வழிகளும் கண்டிப்பாகத் தவிர்த்து விடுவதால் எந்த வயதிலும் ஒரே மாதிரியான பொலிவான தோற்றத்தைப் பெற்று ஆரோக்கியமாகவும் திகழலாம்.