FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 23, 2016, 01:40:34 PM

Title: ~ மீன் மசாலா வறுவல் ~
Post by: MysteRy on June 23, 2016, 01:40:34 PM
மீன் மசாலா வறுவல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2F-%25E0%25AE%25AE%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25BE-%25E0%25AE%25B5%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25B2%25E0%25AF%258D-e1466607497693.jpg&hash=e838e951590f726536e2a176ab9e5b8e661b2c51)

மீன் – 200 கிராம்
வெங்காயம்- 1
இஞ்சி – 1/2 துண்டு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 6
பூண்டு – 3 பல்
வினிகர் – 1/2 டீஸ்பூன்
பிரட் தூள் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

மீன் மசாலா வறுவல்
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் இஞ்சி பூண்டு முதலியவைகளை உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவை மீனின் மேல் பிசறி 1 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறிய மீனை பிரட் பவுடரில் பிரட்டி நன்றாக எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். சுவையான மீன் மசாலா வறுவல் ரெடி….