FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 23, 2016, 01:32:24 PM
-
கேரட் கொத்து சப்பாத்தி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2F%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%25B0%25E0%25AE%259F%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581-%25E0%25AE%259A%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.jpg&hash=03513222b122e61aff688b8b4ec92f930c7a6689)
தேவையான பொருட்கள்
சப்பாத்தி -3
கேரட் (சிறியதாக) – 1
முட்டை -1
நறுக்கிய வெங்காயம்-3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பச்சைமிளகாய்-1
வரமிளகாய்-1
சக்தி கறி மசாலாபொடி- 2டீஸ்பூன்
எண்ணெய்
கடுகு-1/2டீஸ்பூன்
சோம்பு(பெருஞ்சீரகம்)-1/2டீஸ்பூன்
உப்பு
செய்முறை
கேரட் கொத்து சப்பாத்தி
கேரட்டை கழுவிவிட்டு காய் துருவியில் துருவி வைக்கவும்.
சப்பாத்தியை மெல்லிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவிட்டு, கடுகு – சோம்பு சேர்த்து பொரியவிடவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கிள்ளிய வரமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கேரட்டை சேர்த்து ஒரு நிமிஷம் வதக்கி, முட்டையை உடைத்து ஊற்றவும்.
முட்டையை ஊற்றியதும் நன்றாக கிளறிவிடவும், ஒரு நிமிடத்தில் முட்டை வெந்துவிடும். பின்னர் உப்பு – மசாலாபொடி போட்டு கிளறவும்.
மசாலா வாசம் போனதும் (ரொம்ப நேரமாகாது, ஒரு நிமிஷம் வதக்கினால் போதுமானது.) நறுக்கிய சப்பாத்தி துண்டுகளைச் சேர்த்து கலந்துவிடவும்.
அவ்ளோதாங்க, கேரட் கொத்து சப்பாத்தி ரெடியாகிருச்சு! Maggi hot n sweet tomato chilli sauce உடன் சூடாக சாப்பிட சூப்பராக இருக்கும்.
முன்பே செய்து வைத்த சப்பாத்தி (அ) ரெடிமேட் சப்பாத்தி இருந்தால் சட்டென்று செய்துவிடலாம். சப்பாத்திக்கு செய்த குருமா ஏதாவது மீதம் இருந்தால் ஒரு கரண்டி குருமாவும் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.