FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 23, 2016, 01:24:29 PM
-
புளிச்சக்கீரை சட்னி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2FCapture-9.jpg&hash=fdb3877e3199cec7ed66091c2907add96e83cb85)
புளிச்சக்கீரை – 1 கட்டு,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
பூண்டு உரித்தது – 6 பல்,
காய்ந்தமிளகாய் – 6,
எண்ணெய் – 3 மேசைக் கரண்டி,
உப்பு – தேவைக்கு.
தாளிப்பதற்கு…
கடுகு – 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 2,
பெருங்காயம் – ¼ டீஸ்பூன்.
புளிச்சக்கீரையின் இலையை உதிர்த்து எடுத்து கழுவி ஈரம் போக துடைத்து சிறிது உலர்த்தி வைக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கீரையை நன்கு வதக்கி தனியாக வைக்கவும். வேறு ஒரு கடாயில் காய்ந்தமிளகாய், பச்சை மிளகாய், வெந்தயம் அனைத்தையும் தனித்தனியாக அரைத்து பொடி செய்து கொள்ளவும். கடாயில் மீண்டும் மீதி உள்ள எண்ணெயை ஊற்றி கடுகு, மிளகாய், பெருங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
இப்போது வதக்கிய கீரையை மிக்சியில் அரைத்து தாளிப்புடன் சேர்த்து கிளறி தேவையான உப்பு, பொடித்த பொடிகள் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். பல நல்ல குணங்கள் உடைய இந்த புளிச்சக்கீரை சட்னி மிக சுவையாக இருக்கும். சிலர் ஒன்றும் பாதியாக அரைத்தும் வதக்குவார்கள்.