FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 23, 2016, 12:09:50 PM
-
கத்தி ரோல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2F-%25E0%25AE%25B0%25E0%25AF%258B%25E0%25AE%25B2%25E0%25AF%258D-e1466515506878.jpg&hash=22f1efeffa00564dd124db914c49b87020c7f693)
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் – 1,
பச்சை குடை மிளகாய் – 1,
தக்காளி – 2 (நறுக்கியது),
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்,
தக்காளி ப்யூரி – 3 டேபிள்
ஸ்பூன், பனீர் – 1 கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
சிவப்பு மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி, புதினா சட்னி – 2 டேபிள்ஸ்பூன்,
யோகர்ட் – 1/4 கப்,
புதினா இலை – சிறிது,
வெங்காயம் – சிறிது (வளையங்களாக நறுக்கியது) அலங்கரிக்க,
சப்பாத்திகள்- தேவைக்கு.
கத்தி ரோல்
கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். இத்துடன் குடை மிளகாய், தக்காளி, மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். இதில் தக்காளி ப்யூரி சேர்த்து அதிக சூட்டில் 1 நிமிடம் வதக்கவும். இதில் பனீர், உப்பு, சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும். ஒரு தட்டில் சப்பாத்தி வைத்து அதன் மேல் புதினா, கொத்தமல்லி சட்னி, யோகர்ட் சேர்த்து சமமாக தடவவும். இதன் மேல் காய்கறி கலவையை வைத்து, அதில் புதினா இலைகளை தூவி வெங்காய ஸ்லைஸ்கள், சாட் மசாலா சேர்த்து சப்பாத்தியை ரோல் செய்யவும். இதே போல மற்ற சப்பாத்திகளையும் செய்யவும். சுவையான கத்தி ரோல் ரெடி.