FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 22, 2016, 11:10:21 PM
-
டயட் நோன்புக் கஞ்சி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fawq-1.jpg&hash=95c794572537a523491a3f0d8ff8432857601084)
கஞ்சி மிக்ஸுக்கு…
சிவப்பரிசி – 1 கப்,
கொள்ளு – 1 கப்,
பார்லி – 1 கப்.
கஞ்சியில் சேர்க்க…
வெங்காயம் – சிறிது (பொடியாக நறுக்கிய)
தக்காளி, காரட், பீன்ஸ் – சிறிது,
இஞ்சி-பூண்டு விழுது – சிறிது,
புதினா இலைகள் – சிறிது,
உப்பு – தேவைக்கேற்ப,
தேங்காய் எண்ணெய் – அரை டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
சிவப்பரிசி, கொள்ளு, பார்லி ஆகியவற்றைத் தனித்தனியே வெறும் கடாயில் வறுத்து, மெஷினில் கொடுத்து ரவையாக உடைத்துக் கொள்ளவும். தேவையான போது, அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்து, கஞ்சி மிக்ஸை சேர்த்துக் கட்டிதட்டாமல் கிளறி, வெந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும். இதையும், தயாராக உள்ள கஞ்சியையும் சேர்த்து, உப்பு சேர்த்து பரிமாறவும். காலை உணவுக்கு ஏற்றது. பார்லி, உடலில் உள்ள கெட்ட நீரை எடுக்கும். கொள்ளு, கொழுப்பைக் கரைக்கும்.