FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 22, 2016, 11:03:25 PM
-
ஸ்வீட் கார்ன் பனீர் சுண்டல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fsj.jpg&hash=0ebf1541050c8dda72d86dcd40f87b6b27b28c46)
தேவையான பொருட்கள்
சோளம் – 1 கப்
பெரியதாக அரிந்த பன்னீர் – 1 கப்
பச்சை மிளகாய் – 1
குடைமிளகாய் – பாதி
உப்பு – தேவைக்கு
தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் – 4 டீஸ்பூன்
தாளிக்க…
கடுகு, கறிவேப்பிலை – தேவைக்கு
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
வறுத்துப் பொடிக்க…
தனியா – 2 டீஸ்பூன்
எள் – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்
விழுதாக அரைக்க…
காய்ந்த மிளகாய் – 3
கொத்தமல்லித்தழை – 6 டீஸ்பூன்
காய்ந்த மிளகாயை வெந்நீரில் ஊறவைத்து ஆறிய பிறகு மிக்ஸியில் நைசாக அரைக்க வேண்டும். பிறகு கொத்த மல்லித்தழையைத் தனியாக அரைத்தெடுக்க வேண்டும்.
எப்படிச் செய்வது?
சோளத்தில் சிறிது உப்புச் சேர்த்து குழைந்துவிடாமல் வேகவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய், குடை மிளகாய், பனீர் சேர்த்து வதக்கி வெந்த சோளத்தையும் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் விழுதைச் சேர்த்துக் கிளறவும். பிறகு கொத்தமல்லித்தழை விழுது சேர்த்து, தக்காளி சாஸ் ஊற்றி, வறுத்துப் பொடித்த பொருட்களை சேர்க்கவும். கடைசியாக, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, தேவையான அளவு உப்புச் சேர்த்து எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.