FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 21, 2016, 08:59:01 PM
-
முருங்கைக்காய் சூப்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fmk-8.jpg&hash=509fc373d8ef333a1daf0da99d7c3484db050247)
முருங்கைக்காய் – 4
பூண்டு – 5 விழுதுகள் (நசுக்கிய விழுதுகள்)
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – சிறிது
கருவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது – சிறிது
மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை
சிறிய வெங்காயம் – 8 (தோல் நீக்கி, நான்காக குறுக்கு வாட்டில் வெட்டிக்கொள்ளவும்)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சாம்பார் பருப்பு – 5 டீஸ்பூன்
முருங்கைக்காய்யை விரல் நீளத்திற்கு வெட்டி கொள்ளவும். வெட்டிய முருங்கைக்காய்யுடன் சாம்பார் பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் விட்டு வேக வைக்கவும். நன்கு வெந்த முருங்கைகாயில், ஒரு ஸ்பூன் உதவியுடன் அதனின் சதைகளை தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும். வேகவைத்த சாம்பார் பருப்பை வடிகட்டி தண்ணீரை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். சாம்பார் பருப்புடன் பிரித்து எடுத்த முருங்கைக்காய் சதைகளை சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், நசுக்கிய பூண்டு விழுதுகள்,கருவேப்பிலை , மிளகு சேர்த்த பின்பு வெங்காயத்தை சேர்த்து பொன் நிறம் வரும் வரை நன்கு வதக்கி கொள்ளவும். பின்பு பிரித்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்து பிசைந்து வைத்துள்ள சாம்பார் பருப்புடன் கூடிய முருங்கைக்காய் சதைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் பொது, கொத்தமல்லி தழைகளை சேர்த்து சிறிது நிமிடங்களில் இறக்கி விடவும். சுவையான முருங்கைக்காய் சூப் ரெடி.