FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 21, 2016, 08:53:01 PM
-
ட்ரிப்பிள் சாக்லெட் மில்க் ஷேக்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fjuo.jpg&hash=9dd9ce53ce661766b62b8ebc90b84334a194f5c5)
தேவையான பொருட்கள்:
சாக்லெட் ஐஸ்கிரீம் – 1-2 ஸ்கூப்
பால் – 8 அவுன்ஸ் (240 மி.லி)
சாக்லேட் குச்சிகள் அல்லது ஸ்ட்ரா – தேவையான அளவு
சாக்லேட் – இரண்டு (நொறுக்கப்பட்டது)
திரிக்கப்பட்ட க்ரீம் – தேவையான அளவு
சாக்லேட் சிரப் அல்லது சாஸ் – தேவையான அளவு
செய்முறை:
1. 8 அவுன்ஸ் பாலை பிலண்டர் அல்லது கலப்பானில் (Blender) சேர்க்கவும்.
2. பின் சாக்லேட் ஐஸ்கிரீமை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
3. ஐஸ்கிரீம் மற்றும் பால் நன்றாக ஒரு கலவையாக மாறும் வரை கலக்கவும்.
4. பின்னர் சாக்லேட் துகள்களை சேர்க்கவும். பின்பு திரிக்கப்பட்ட க்ரீம், சாக்லெட் சிரப் அல்லது சாஸ் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
5. மில்க் ஷேக் மிருதுவாக வரும் வரை நன்றாக கலக்கவும்.
6. இறுதியில் பிலண்டரை அணைத்துவிட வேண்டும். இப்போது அந்த ட்ரிப்பிள் சாக்லெட் மில்க் ஷேக்கை கண்ணாடி கோப்பைகளில் ஊற்ற வேண்டும்.
7. பின் அதன் மேல் சாக்லேட் சிரப் அல்லது சாஸை தெளித்து, ஸ்ட்ரா போட்டு பரிமாறவும்.