FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 19, 2016, 11:00:49 PM

Title: ~ ஆப்பிள் பர்ஃபி செய்வது எப்படி ~
Post by: MysteRy on June 19, 2016, 11:00:49 PM
ஆப்பிள் பர்ஃபி செய்வது எப்படி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fappe.jpg&hash=68b2f45a50199536d959a0a1230d61fe642c91d9)

தேவையான பொருட்கள் :

ஆப்பிள் – 6,
தேங்காய்த் துருவல் – 1 கப் கப்,
சர்க்கரை – அரை கப்,
சீவிய பிஸ்தா – ஒரு டேபிள்டீஸ்பூன்,
நெய் – ஒரு டேபிள்டீஸ்பூன்,
உப்பு – ஒரு துளி.

செய்முறை :

* ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
* வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் தேங்காய்த் துருவல், ஆப்பிள் துருவல், உப்பு சேர்த்துக் நன்றாக கிளறவும்.
* பிறகு, சர்க்கரையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் நன்கு கிளறவும்.
* பர்ஃபி பதத்துக்கு வந்ததும் இறக்கி, ஒரு தட்டில் சிறிது நெய்யை தடவி அதில் கலவையைப் போட்டு பரப்பவும்.
* கடைசியாக அதன் மேல் சீவிய பிஸ்தாவை தூவவும்.
* ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறவும்.
* குழந்தைகளுக்கு இந்த ஆப்பிள் பர்ஃபி மிகவும் பிடிக்கும்.