FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 19, 2016, 10:57:09 PM
-
வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fegg.jpg&hash=feae1de88680f60c073a5ef19d66fc8333b14293)
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி – 2 கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது எண்ணெய் – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் சப்பாத்தி மற்றும் எண்ணெயைத் தவிர, அனைத்து பொருட்களையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். கல் சூடானதும், ஒரு சப்பத்தியை எடுத்து கல்லில் போட்டு, கலந்து வைத்துள்ள பேஸ்ட்டைத் தடவி எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இதுப்போன்று அனைத்து சப்பாத்தியையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி ரெடி!!!