FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 19, 2016, 10:53:44 PM
-
பேரீச்சை சட்னி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2F%25E0%25AE%25AA%25E0%25AF%2587%25E0%25AE%25B0%25E0%25AF%2580%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%2588-%25E0%25AE%259A%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF.jpg&hash=564b37355429c034177e106c85dcb242c59b5d5d)
தேவையான பொருட்கள்:
பேரீச்சை – கொட்டை நீக்கியது 5-6
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
துருவிய வெல்லம் – 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – 2 டீ ஸ்பூன்
பேரீச்சை சட்னி
செய்முறை:
* புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
* பேரீச்சையை நன்றாக மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதையும் சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளுங்கள்.
* அடிகனமான வாணலியில் வெல்லத்தை கரைத்து கொண்டு மணல் இல்லாமல் வடிகட்டி வையுங்கள்.
* வாணலியை அலம்பி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து புளித்தண்ணீரை விட்டு கொதிக்க ஆரம்பித்ததும், பேரிச்சை விழுதை விட்டு, வெல்லக் கரைசலையும் விடுங்கள்.
* கொஞ்சம் கெட்டிப் பட ஆரம்பித்ததும், இதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து வையுங்கள்.
* இதை பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
* வடஇந்திய உணவுகளுக்கு dressing ஆகவும், சமோசா போன்றவற்றிருக்கு sauce மாதிரியும் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.