FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 19, 2016, 10:47:26 PM
-
பலாக்காய் சுண்டல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F08%2FJackfruit-seed-sukka-3-E-1024x775.png&hash=9c02337e963efbe8408da888d855becd894c1df0)
தேவையான பொருட்கள்:
பலாக்காய் – 250 கிராம்
கருப்பு கொண்டைக்கடலை – 100 கிராம்
சிறிய வெங்காயம் – 100 கிராம்
தேங்காய் துருவல் – 2 மேஜை கரண்டி
மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி
கறிமசாலா தூள் – ½ தேக்கரண்டி
புளி – சிறிதளவு
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
தாளிக்க:
கடுகு – ½ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
* கருப்பு கொண்டைக்கடலையை வேக வைத்துக் கொள்ளவும்.
* சிறிய வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
* குக்கரில் பலா துண்டுகளுடன் புளி, மஞ்சள்தூள் கலந்து ஐந்து விசில் வரும் வரை வேகவையுங்கள். பின்பு ஆற வைத்து உதிர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயத்தைகொட்டி வதக்குங்கள். அதில் உதிர்த்து வைத்துள்ள பலாக்காய், கொண்டைக் கடலை, மிளகாய்தூள், கறி மசாலா தூள், உப்பு, தேங்காய் துருவல் போன்ற அனைத்தையும் இட்டு நன்கு கிளறி இறங்குகள்.
* சுவையான பலாக்காய் சுண்டல் ரெடி. இது மிகவும் சுவையானது.
* இதை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சியுடன் காலை உணவாக சாப்பிடலாம். கொண்டைக் கடலை, பலாக்காய் இரண்டிலும் குறைந்த அளவே கிளைசின் இருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.