FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 19, 2016, 10:42:37 PM

Title: ~ மீன் அவியல் ~
Post by: MysteRy on June 19, 2016, 10:42:37 PM
மீன் அவியல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F08%2Foetlioaidjjji_bigger.jpg&hash=aa05a1b1a1ed1ad3bc560c8529d0a611ce86ae30)

தேவையானபொருட்கள் :

மீன் – அரைக் கிலோ (விருப்பமான மீன்)
தக்காளி – ஒன்று
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 3
தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 2
சீரகம் – ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை:

• தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
• மீனை நன்கு கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம், காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் ஆகிய‌வற்றை மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
• அரைத்த விழுதை ஒரு வாணலியில் போட்டு அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சூடாக்கவும்.
• அதன் பிறகு அந்த விழுதுடன் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும்.
• அதில் தேவையான‌ அளவு தண்ணீர் ஊற்றி கறிவேப்பிலை தூவி கொதிக்க‌ விடவும்.
• மீன் வெந்ததும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். அவியல் கொதித்து கெட்டியானதும் இறக்கி விடவும்.
• சுவையான மீன் அவியல் ரெடி.