FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 19, 2016, 09:43:47 PM
-
கிழங்கான் மீன் குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fkilanga-meen-kulambukilanga-meen-kulambu-tamil-nadukilanga-meen-kulambu-recipe-how-to-cookingtamil-samayal-kurippu-kilanga-fish-curry-e1445528728962.jpg&hash=6327f2b3aa9bb341865ffa2ed15fd13b7b4d2ae4)
கிழங்கான் மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கி ( ரெண்டு மூன்றாய் நறுக்கியது)
தக்காளி – 3 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 10 பல்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மல்லி தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
புளி – 50 கி ( பெரிய எலுமிச்சை அளவு )
தேங்காய் – 1/2 மூடி
சோம்பு -1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு,வெந்தயம் போரியவிட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும். பின் தக்காளி போட்டு வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும்.(புளிக்கரைசலில் மிளகாய் தூள்,மல்லி தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கலக்கவும்.) நன்கு கொதி வந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும். 10 நிமிடம் கொதித்ததும் கழுவிய மீன் துண்டுகளை போட்டு 5,6 நிமிடம் கொதிக்க விடவும். நகரத்தார் மீன் குழம்பு சுடச்சுடத் தயார்!