FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 19, 2016, 09:27:57 PM

Title: ~ அல்சர் பிரச்சினை உள்ளவர்களுக்கான மிளகு குழம்பு ~
Post by: MysteRy on June 19, 2016, 09:27:57 PM
அல்சர் பிரச்சினை உள்ளவர்களுக்கான மிளகு குழம்பு

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F07%2Findex2.jpg&hash=d6552103973cbd3af51e475188a10341c65512dd)

தேவையான பொருட்கள்:

புளி – சிறு உருண்டை
தேங்காய்ப்பூ – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பூண்டு –  8 பல்
சின்ன வெங்காயம் – 4
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
தனியாதூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு, பெருங்காயம் – தாளிக்க தேவையான அளவு
 
செய்முறை:

• பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.
• வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகு சீரகத்தை போட்டு பொரிந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து
நன்றாக வாசனை வரும்வரை வதக்கி ஆற வைத்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
• புளியை நன்கு கரைத்து அத்துடன்
மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழம்பு கூட்டிக் கொள்ளவும்.
• இத்துடன் அரைத்த மிளகு விழுதை சேர்த்து
கரைத்துக் கொள்ளவும்.
• வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, கூட்டி
வைத்திருக்கும் குழம்பை ஊற்றி கொதிக்க விடவும்.
• அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க
வைத்து இறக்கவும்.
• இப்போது மணக்கும் மிளகுக் குழம்பு ரெடி