FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on June 18, 2016, 11:47:09 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 107
Post by: MysteRy on June 18, 2016, 11:47:09 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 107
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Parushni ( Krypto ) அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F107.jpg&hash=17e5dc6c40a230710295720845e868afa47a1de6)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 107
Post by: பொய்கை on June 19, 2016, 01:21:56 AM
பாவி நானும் தேடிட்டேன்
இங்கே பழைய சோற்றை
காணலையே !

பச்சைமிளகாய் , வெங்காயம்,
ஊறி புளிச்ச மாங்காயும் ,
அறைச்சு  எடுத்தாலும், அம்மி
மணக்கும் துவயளையும்
ஐயோ இங்க காணலையே !

வித விதமா செஞ்ச புள்ள 
பக்குவமாய் எடுத்தும் வச்ச புள்ள
கையையும் கழுவி வந்து
காத்திருக்கேன்... பரிமாற
நீயும்  இங்கே காணலையே!

இறால், நண்டு , வறுவல்
எல்லாத்தையும் பார்த்து
டாஸ்மார்க் கடைக்கு போன
என் இனிய நண்பர்கள் 
வைப்பரையும் , டாங் லீ
பேட்மேன் ,ஜோக் யாரையும்
இன்னும் இங்கே காணலையே !

பசி வந்தால் பத்தும் பறந்து
போகும்.. என்று சொன்ன சொல்லு
என் காதில் இப்போ கேட்குதப்பா
வகை வகையா உணவிருக்கு
உழைக்காத என் உடம்பில்
பசியை  இப்போ காணலையே !

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 107
Post by: thamilan on June 19, 2016, 06:48:32 PM
எத்தனை  வகை பாஸ்ட் புட் வந்தாலும்
எந்த நாட்டு உணவாக இருந்தாலும்
நம்ப ஊரு உணவுக்கு முன்னே
அத்தனையும் தூசு தான்

எத்தனை  ஆடம்பர
மேசைக் கதிரையில் அமர்ந்து
உணவு உண்றாலும்
வெள்ளி கரண்டி கொண்டு
அள்ளித் தின்றாலும்
தரையில் அமர்ந்து
அள்ளித்தின்னும் ஒவ்வொரு முறையும்
உணவுக்கு தலைவணங்கி மரியாதை செய்யும்
தமிழனின் பண்பாட்டுக்கு நிகர் உண்டா 


ஐந்து வகை சாதத்தோட
அவியல் கூட்டு சாம்பார் ரசத்தோட
சம்மணம் கட்டி உட்கார்ந்து
வாழை இலையில் குழைத்து சாப்பிடும்
ருசிக்கு நிகர்
என்ன தான் பீசா ருசித்தாலும்
பேகர புசிசாலும் வருமா

அதுவும் பாயாசதுக்குள்ள
பப்படத்த நொறுக்கிப் போட்டு
குழைத்து அள்ளி வாயில போடுறப்போ
விரல் வழியா வழிவதையும் விட்டுவைக்காமல்
விரல்களையும் சூப்பும் போது
தேவாமிர்தமும் தோத்துப் போகுமே


ஆனால்
 ஆறு நிறைய நீரானாலும் 
நாய் கக்கித்தான் குடிக்கனும்
எத்தனை வகை வகையாக உணவிருந்தாலும்
சுகர் உள்ளவனும்  அல்சர் உள்ளவனும்
அளவோட தான் உண்ண  முடியும்
நண்டு வறுவலும் இறால் பிரட்டலும்
கோழி பிரியாணியும்
பார்க்க பார்க்க நாக்கில எச்சில் ஊரத் தான் செய்யும்
கொழுப்பு கூடி  இதயத்தை அடைக்கும்
என்ற பயம் வரும் போது
அவைகளைப் பார்த்து
பெருமூச்சி விட மட்டுமே முடியும்   
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 107
Post by: EmiNeM on June 20, 2016, 08:24:01 AM
தலை வாழை விரித்து
பட்சணங்கள் வரிசையிட்டு
பலகாரங்கள் விதவிதமாய்
வீற்றிருக்க
ஒரு சாண் வயிற்றுக்கு
அறுசுவை சேர்த்து
நெய்யமுது அருந்தும்
செல்வெந்தெர்க்கெல்லம்
உதடுகள் வறண்டு
வயிரொட்டிய
வறுமையில் வாடும்
ஓர் ஏழைக் குழந்தைக்கு
ஒரு குவளை சோறும்
ஓர் ஏடும் தரும்
மனம் தருவாய்
பராசக்தி  >:(
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 107
Post by: Jabber on June 20, 2016, 10:41:40 AM


அன்னலெட்சுமி அவளின் பேரு..
உன்னுள் தான் எத்தனை கூறு..

ஆளுக்கொரு ரசனை பாரு..
ஊருக்கொரு வாசனை வேறு..

இலையோடு நீரு மோரு..
விலையோ இன்று தாறுமாறு..

ஒன்றாய் உண்ணலாம் நிலாச்சோறு..
நன்றாய் திண்ணலாம்  கூட்டாஞ்சோறு...


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 107
Post by: பவித்ரா on June 20, 2016, 01:52:59 PM
எல்லா ஜீவராசிகளும் உயிர் வாழ
உணவும் தேவையே
உணவே மருந்து,மருந்தே உணவென்று
உணர்ந்து வாழ்ந்தவன் தமிழன்
ஆதலால் தான் என்னவோ
இன்று வரை இட்லிக்கு நிகராய்
ஒரு உணவு கண்ணில் படாமலே உள்ளது ....!

அந்தந்த நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு
ஏற்றார் போலவே உணவு புசிக்கப்பட்டது
கிடைத்த பொருள் கொண்டு புதிது
புதிதாய்  செய்து ருசிக்கபட்டது
பாரம்பரிய உணவு என்று எல்லா
இனத்தவருக்கும் சில உணவுகள் உள்ளது ...!

பண்டிகை பெருநாளில் முன்னோர்கள்  அன்று
செய்த கைமுறுக்கு அதிரசம் சீடையின்
மனமும் சுவையும் உண்டு களித்த சிலர்  மட்டுமே
அறிவர் பலருக்கு அதன் பெயர் கூட தெரியாது
பிறகெங்கே அருமை தெரியபோகிறது ....!

அறுசுவை உணவிற்கும் ஆரோக்கியத்திற்கும்
முடிச்சி போட்டவன் தமிழன்,
விருந்து என்று வந்துவிட்டால் வடை பாயசத்தோடு
அவியல் பொரியல் என்றாலும் சரி ஆடு கோழி பிரியாணி
இறால் நண்டு வறுவல் என அசைவமானாலும் சரி
 பல விதம் பரிமாறி திக்கு முக்காட செய்வதில்
தமிழனை மிஞ்ச ஆள் இல்லை பாரினிலே ...!

காலில் சக்கரம் கட்டி பணத்தை நோக்கி ஓடி
வாழ்க்கையை ரசிக்காமல் வாழும்
சிலருக்கு ருசியாய் உணவு கிடைக்காது
பலருக்கு கிடைத்தாலும் உண்பதற்கு
நேரம் இருக்காது நேரமே  இருந்தாலும்
நோய் வந்து வதைக்கிறது ...!

இயற்கை காய்கறிகளை உண்டு
ஆரோக்கியமாக வாழலாம் என்று சொன்னவரை
கிண்டல் பார்வை பார்த்துவிட்டு இன்று
நிமிடத்தில் தயார் ஆகும் அரவேக்காட்டு
உணவு உண்டு என்ன ஆரோக்கியம் கண்டாய்...!

புதிது புதிதாய் உணவு தயார் செய்து
பெயர் வைத்து பெருமை கொண்டாய்
மருத்துவரும் அவர் பங்கிற்கு பெயர்
வைத்தார் புதிதாய் வந்த பல நோய்களுக்கு
உண்பதற்காக வாழாதிர்கள்
வாழ்வதற்காக உண்ணுங்கள்
வாழ்க நலமுடன் .....!

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 107
Post by: ரித்திகா on June 20, 2016, 02:38:51 PM
;D ;D ;D ;D~ !!! வித விதமா இருக்கே ... !!! ~
     ~ !!! கவிதை அருவிய கொட்ட
              ஆசையா இருக்கு வாய்குள்ள ...!!! ~
   ~ !!! கவிதை எழுதத் தோணலே ...!!! ~
  ~ !!! இருந்தாலும் முயற்சி பண்றேன் ...!!! ~ :) :) :) :)

 - !!! ஏழையோ பணகாரனோ !!! -
   - !!! மனிதனோ மிருகமோ !!! -
      - !!! பசி எனும் உணர்வு சமம்மானதே !!! -
 
  - !!! வீட்டில் வகை வகையானே !!! - 
      - !!! உணவுகள்  உன் பசியை
            தீர்க்க  வரிசைப்படுத்திக்  காத்திருக்க !!! -
  - !!! வெளியில் பசியினால் அலறும்
            ஏழையின் குரல் கேட்க  வில்லையா உனக்கு !!! -

   - !!! பசியில் வாடி வதங்கும்
             ஒருவனின் பசியை தீர்க்க
                கஞ்சத்தனம் படுவதேனோ ??? !!! - >:( >:( >:( >:(
  - !!!  ஐய மிட்டுண் என்ற
              ஔவையாரின் வார்த்தைகள்
                   காற்றோடு காற்றாக மறைந்தனவோ ...??? !!! - :( :( :( :(
     - !!! பசியினில் வாடும்
             ஒருவரின் பசியை போக்கிப்பார் !!! -
         - !!! விலைமதிப்பில மகிழ்ச்சி
   அவர் முகத்திலும் உன் மனதிலும் உணருவாய் !!! -

 - !!! பிறருக்கு கொடுத்து உண்போம்
          பகிர்ந்து உண்போம் !!! -  :) :) :) :)

 ~ !!! ரி தி கா !!! ~ ;) ;) ;)
[/b]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 107
Post by: JEE on June 20, 2016, 08:19:54 PM
எத்தனை வகை வகையான உணவுகள்......... 
அத்தனையையும் பல் போகுமுன்னே ருசி பார்
இன்சுலின் நன்றாக சுரக்கும் போது ஆசை தீர
நன்றாக சகலத்தையும் ருசி பார்........


சரீரம் நாமல்ல அது நமக்கான ஓர் இயந்திரம்
சரீரம் பழுதாகமல்  இருக்க நாம் ஓர் யயணி........

கடவுள் இவ்வுலகு உருவாகுமுன்னே
புரோகிராம் பண்ணி வைத்த சரீரம் இது......
நம் சரீர ஒவ்வோர் அசைவையும்   
புரோகிராம் பண்ணி வைத்த சரீரம் இது........

நீயும் நானும் நன்றாக இவ்வுலகை ரசிக்க ருசிக்க
முடியும் வரை பிரயாசப்படு........

எத்தனை வகை வகையான உணவுகள்
அத்தனையும் படைக்கும் படைப்பாளி நீ.....
இல்லறத்துக்கு தகுதி பெற்றாய்.....
குழந்தை குட்டிகள் நன்றாக ருசிக்கத்தானே......



எத்தனை வகை வகையான உணவுகள்
அத்தனையும் படைக்கும் படைப்பாளி நீ....
படைக்கும் நீ நன்றாக படைத்தாய் எங்கள்  வயிறு
புடைக்க சாப்பிட அழைத்தால் தானே ......


எத்தனை வகை வகையான உணவுகள் 
அத்தனையும் படைக்கும் படைப்பாளி  பகவான்
அழையா விருந்தாளியாக செல்வோர்
அகலமான பாதை கண்டோர் .......
அழைதத விருந்தாளியாக செல்வோர்
ஒடுக்கமான பாதை கண்டோர்......

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 107
Post by: சக்திராகவா on June 22, 2016, 12:47:56 PM
கொப்பரையில் நெல்லவிச்சி
கொண்ட களம் கிண்டிவெச்சி
உலர உலர கிளறிவிட்டு
உரளில் போட்டு உமிபிரிச்சு

இரண்டு பங்கு தண்ணிவெச்சி
தண்டுவெரக தள்ளிவெச்சி
கொதிச்ச கஞ்சி வடிச்ச சோறு
தட்டில் பட்ட மணம் பரவும்

நெனைச்சாலே எச்சோழுகும்
நீ விளையவெச்ச நெல்வாடை
யாருக்கும் வாய்க்காது
விவாசாயி உன் விருந்து

கம்பங் கூழும்
களைப்பாற மோரும்
காஞ்ச மொளகாயும்
கடிக்க வெங்காயம்!

அச்சசோ என்ன சொல்ல
அணிபுள்ள கடிச்ச பழம்
காட்டுல வெளஞ்சதெல்லாம்
கடவுள் விருந்து!
கடையில வாங்குரதோ
கலப்பட மருந்து!