FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 18, 2016, 11:36:07 PM
-
பஞ்சாபி சிக்கன் கறி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2014%2F09%2Fhqdefault.jpg&hash=d6d3e51d3a8b038991fe9df50350c5f71fc9e14d)
தேவையான பொருட்கள்:
சிக்கன்-1/2கிலோ
தயிர் -3/4கப்
இஞ்சி விழுது-1tbsp
பூண்டு விழுது-1tbsp
மிளகாய் தூள்-1tbsp
அரைப்பதற்கு:
பெரிய வெங்காயம்-3[நடுத்தரம்]
தக்காளி-3
கிராம்பு-2
மிளகு-5
ஏலக்காய்-3
மல்லித்தூள்-1tbsp
இவை அனைத்தையும் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
*கழுவி சுத்தம் செய்யப்பட்ட கோழியுடன்,தயிர்,இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு போட்டு பிரட்டி 1 மணிநேரம் வைக்கவும்.
*இருப்பு சட்டியை அடுப்பில் வைத்து,5 tbsp எண்ணெய் விட்டு,அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.மசாலா நன்கு வதங்கிய பின்,கோழியை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
*பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு,கோழி வெந்ததும் இறக்கி வைத்து,சிறிது பச்சை கொத்தமல்லி இலையைப் போடவும்.
*சப்பாத்தி ,பரோட்டாவிற்கு ஏற்ற சைட் டிஷ்.