FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 18, 2016, 10:36:17 PM

Title: ~ பட்டர் சிக்கன் ~
Post by: MysteRy on June 18, 2016, 10:36:17 PM
பட்டர் சிக்கன்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F04%2F%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B0%25E0%25AF%258D-%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg&hash=da30ca45adb7db1ee7a1e5d0b14be06274c46807)

வெண்ணெய 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
இஞ்சி 1 டேபிள் ஸ்பூன்(துருவியது)
பூண்டு 3
பல்லாரி 2
தக்காளி 3
சின்ன வெங்காயம் 5
மல்லித்தூள் 1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
புதினா 10 இலைகள்
மல்லிதழை 1 கொத்து
கறிவேப்பிலை சிறிதளவு

எப்படி செய்வது?

பட்டர் சிக்கன்
நன்கு கழுவி சுத்தம் செய்த சிக்கனுடன் உப்பு, மிளகாய் பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள், புதினா, பொடிப்பொடியாக நறுக்கிய மல்லிதழை, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகிவற்றை சேர்க்கவும். நீளவாக்கில் அரிந்த பல்லாரியில், சிறிதளவு (அரை பல்லாரி) எடுத்து வைத்து கொண்டு மீதமுள்ள பல்லாரியை சிக்கனுடன் சேர்த்து குக்கரில் தண்ணீர் சேர்க்காமல் சிம்மில் வேக வைக்கவும். (கடாயில் வேக வைத்தால் தண்ணீர் சேர்த்து வைக்க வேண்டும்)
சிக்கன் வெந்தவுடன், குக்கரை திறந்து வைத்து மூடாமல் அதில் மீந்த தண்ணீரை வற்ற விடவும், சிக்கனை மசாலாவுடன் நன்கு பிரட்டி எடுக்கவும். வெண்ணெய் கடாயில் உருக்கி, கறிவேப்பிலை, எடுத்துவைத்துள்ள பல்லாரியை நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.மணமும் சுவையும் கொண்ட பட்டர் சிக்கன் ரெடி.