FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 18, 2016, 10:13:02 PM
-
தலப்பா கட்டு மட்டன் பிரியாணி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2FThalappakatti-Mutton-Biryani-Recipe-in-tamil-Thalappakatti-Mutton-Biryani-cooking-samyal-kurrippu-e1444288591744.jpg&hash=20598379c94a9529ef711db2d63fe55595afb936)
தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி – 1/2 கிலோ,
மட்டன் – 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 2,
இஞ்சி, பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி,
தயிர் – 1 கப்,
மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி,
பட்டை – சிறிது,
கிராம்பு – 2,
ஏலக்காய் – 2,
எலுமிச்சம் பழம் – 1/2 மூடி,
எண்ணெய் – 1/4 கப்,
நெய் – 3 மேசைக்கரண்டி,
டால்டா – 3 மேசைக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
பெரிய பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துவதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கி கரைந்ததும், மட்டன் சேர்த்து வதக்கவும்
நன்கு வதங்கிய பின் மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சம் பழ சாறு சேர்த்து, 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
தண்ணீர் கொதிக்கும் போது ஊற வைத்த அரிசியைப் போடவும்.
அரிசி பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும்.
அர்சி வெந்தது, நெய், டால்டா சேர்த்து கிளறி இறக்கவும்.