FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 15, 2016, 10:48:23 PM

Title: ~ டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம் ~
Post by: MysteRy on June 15, 2016, 10:48:23 PM
டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fdd.jpg&hash=1b9fbe146414ea8aa7f0bbf1c3eaff6b6c768a36)

தேவையான பொருட்கள் :

டிராகன் பழம் – 2
தேன் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டி – தேவையான அளவு
குளிர்ந்த நீர் – தேவையான அளவு

செய்முறை :

* டிராகன் பழத்தை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள தசைப்பகுதியை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்துக் கொள்ளவும்.
* பின் அதனை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் குளிர்ந்த நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
* பிறகு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறினால், டிராகன் ஃப்ரூட் ஜூஸ் ரெடி!