FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 15, 2016, 09:56:50 PM
-
கோதுமை இட்லி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2F%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%2588-%25E0%25AE%2587%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BF.jpg&hash=8ed489e92a810a532864d4c3b78a68f77ddaca38)
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை & 1 கப் (சிறியதாக உடைக்கவும்)
கடலைப்பருப்பு & 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு & 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு & 1 டீஸ்பூன்
கடுகு & லு டீஸ்பூன்
பச்சை மிளகாய் & 4 (நறுக்கவும்)
நீர் சேர்த்த மோர் & 2 கப் (கொழுப்பு எடுக்கப்பட்டது)
கறிவேப்பிலை & சிறிதளவு
உப்பு, எண்ணெய் & தேவைக்கேற்ப
செய்முறை:
&
ஒரு கப் ரவைக்கு இரண்டு கப் மோர் தேவை.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
இத்துடன் ரவையையும் வறுத்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தயிருடன் ஊற வைக்கவும்.
இருபது நிமிடங்கள் கழித்து, இட்லி பானையில் வேக வைத்து எடுக்கவும்.