FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Yousuf on January 26, 2012, 04:08:20 PM
-
இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது.
இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அவுஸ்திரேலியாவின் சதர்ன் குவீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் மருத்துவத்துறை விஞ்ஞானிகள் சமீபத்தில் இதுதொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
பெரிய வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்களை எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து மனிதர்களிடமும் அடுத்தகட்ட சோதனை நடத்தப்பட்டது. அதிலும் வெற்றி கிடைத்தது.
இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது: உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமனை கட்டுப்படுத்துவதிலும், சர்க்கரை நோய் பாதிப்புகளை குறைப்பதிலும், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பெரிய வெங்காயம் சிறப்பாக செயல்படுகிறது.
இது தவிர கல்லீரல் பாதிக்கப்படாமலும் காக்கிறது. இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறோம். பெரிய வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ தினமும் சாப்பிடுவது மிகமிக நல்லது. பல்வேறு நோய்கள் வராமல் அது தடுக்கிறது.