ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 106
இந்த களத்தின்இந்த நிழல் படம் Swarangal ( Purple Wave ) அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F106.jpg&hash=e77e0ea42737152855147266de5273f2db396864)
அல்ல அல்ல குறையாத அன்பு வேண்டாம்
நான் உனக்கு திகட்டாமல் இருந்தாலே போதும்
என்னை அழாமல் பார்த்து கொள்ள வேண்டாம்
நான் அழுவதற்கு நீ காரணமாய் இல்லாமல் இருந்தாலே போதும் ...!
காலம் முழுதும் சாய்ந்து கிடக்க உன் நெஞ்சம் வேண்டாம்
என் சோகத்தில் சாய்ந்து கொள்ள உன் தோள் கொடுத்தாலே போதும்
என்னை எப்பொழதும் உள்ளங்கையில் வைத்து நீ தாங்க வேண்டாம்
என் உறவுகளை இனிய முகத்துடன் வரவேற்றாலே போதும் ....!
கண்மூடி தனமாய் என் மேல் நம்பிக்கை வேண்டாம்
என் மேல் சந்தேக விதை விதைக்காமல் இருந்தாலே போதும்
என்னை உன் சரிபாதியாய் நீ நடத்த வேண்டாம்
என் உணர்வுகளுக்கு மதிப்பளித்தாலே போதும் .....!
மெய் சேர்ந்து ஒரு நாளும் பிரியாது இருக்க வேண்டாம்
என் மனதை விட்டு பிரியாது நினைவுகளோடு வாழ்ந்தாலே போதும்
கை கோர்த்து வானத்தில் காதலில் மிதந்திட வேண்டாம்
தனித்தனியே பிரிந்து நடக்காமல் இருந்தாலே போதும் ....!
ஈருடல் ஒருயிராய் வாழ வேண்டாம்
ஒருமித்த கருத்தோடு வாழ்ந்தாலே போதும்
ஏழேழு ஜென்மத்துக்கு நம் காதல் தொடர வேண்டாம்
இந்த ஜென்மத்தில் நல்ல காதலராக வாழ்ந்தாலே போதும் ...!
வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்ய வேண்டாம்
யார் மனமும் கோணாமல் திருமணம் நடந்தாலே போதும்
ஊரை கூட்டி அறுபது சுவை படைத்திட வேண்டாம்
எளிமையாய் திருமணம் முடித்து இல்லறம் அமைத்தாலே போதும் ...!
ஐந்து ஆறு பெற்று அவதி படவேண்டாம்
ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று போதும்
அவர்களுக்காக உடலை வருத்தி சொத்து சேர்க்க வேண்டாம்
நல்ல கல்வி கொடுத்து பண்போடு வளர்த்தாலே போதும் ...!
கண்ணுக்குள் வைத்து வளர்த்திட வேண்டாம்
வளர விட்டு வாழ வைத்து பார்த்தாலே போதும்
சுற்றமும் நட்பும் பகைத்து வாழ வேண்டாம்
ஊரார் மெச்சும்படி வாழ்ந்தாலே போதும் ...!
;) ;)!!! மீண்டும் ஒரு சிறு முயற்சியில் !!! ~
~ !!! என் சிறு கிறுக்கல் !!! ~
~ !!! இமைகளை மூடினேன்... !!! ~
~ !!! விழி முன் ஒரு கனவு !!! ~ :) :)
'' ~ !!! இமைகளை மலர்ந்தேன் !!! ~
~ !!! என் கன்னங்கள் உன் இரு !!! ~
~ !!! கரங்களால் எந்தப்பட்டு இருக்க !!! ~
~ !!! என் நெற்றியில் உன் இதழ் முத்தம் !!! ~
~ !!! நீ எனகாகாக பிறந்தவள் ... !!! ~
~ !!! என் மரியாதைகுறியவள் என்றது !!! ~
~ !!! உன் கரம் பிடித்து அக்னியை சுற்றிவர !!! ~
~ !!! என் வாழ்க்கை உன்னுடன் நிச்சியம்மானது !!! ~
~ !!! என் கலுற்றில் நீ போட்ட !!! ~
~ !!! மூன்று முடிச்சி நான் இனி
உன்னுடையவள் என்று பரிசாற்றியது !!! ~
~ !!! கைகள் மருதாணியால் சிவந்திருக்க ... !!! ~
~ !!! என் கன்னங்கள் நாணத்தால் சிவந்திருந்தது !!! ~
~ !!! நான் நீ நாமாக மாறியது ... !!! ~
~ !!! உன் குடும்பம் என் குடும்பம் !!! ~
~ !!! நம் குடும்பம் ஆனது !!! ~
~ !!! உன்னுள் நான் என்னுள் நீ !!! ~
~ !!! என்று வாழ தொடங்கினோம் !!! ~
~ !!! இன்பத்தையும் துன்பத்தையும் !!! ~
~ !!! இருவரும் சேர்ந்தே பகிர்ந்தோம் !!! ~
~ !!! உன் மனபாரங்களைக் இறக்க
என் மடியினில் சாய்ந்து கோள் !!! ~
~ !!! என் கவலைகளை மறக்க
உன் தோளினில் சாய்கிறேன் !!! ~
~ !!! நாம் இருவரும் வாழ்ந்த
வாழ்க்கைக்கு மற்றும்
காதலுக்கு பரிசாகே
நம் பிள்ளை .... !!! ~
~ !!! ஊரார் போற்ற நம் பிள்ளை வளரே !!! ~
~ !!! பெருமையும் மகிழ்ச்சியும்
குடிகொண்டது நம் மனதில் !!! ~
~ !!! உன்னுடன் உலகம் போற்ற
வாழ விரும்ப வில்லை !!! ~
~ !!! இறுதிவரை உன் இதயத்திற்கு
சொந்தமானவலாக வாழ விரும்புகிறேன் !!! ~
~ !!! உன்னுடன் நான் கொண்ட என்
வாழ்க்கை பயணம் ...... !!! ~
~ !!! உன் ஆயுள் முடியுமுன்
என் ஆயுள் முடிய வேண்டும் .... !!! ~
~ !!! அதுவரை உன் மார்பில்
சாய்ந்து கொள்ள வேண்டும் !!! ~
~ !!! என் வாழ்வின் இறுதி நொடியில்
உன் மடியினில் விழி மூட வேண்டும் ... !!! ~ "
~ !!! விழி திறந்தேன் .......... !!! ~
~ !!! கண்டது கனவு என்று
~ !!! தெரிய சிரித்து கொண்டேன் .... !!! ~
~ !!! கனவில் உன்னுடன் வாழ்ந்தாலும்
என் மனதில் என்றும்
அழியா சுவடுகளாக உன் நினைவுகள் .... !!! ~[/size]
~ !!! நன்றி !!! ~ ~ !!! ரி தி கா !!! ~
[/i]