FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 07, 2016, 11:42:40 PM

Title: ~ சத்தான சௌ சௌ சட்னி ~
Post by: MysteRy on June 07, 2016, 11:42:40 PM
சத்தான சௌ சௌ சட்னி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fsa-1.jpg&hash=c736dd676fa7b203294ea6ea854e573b0c63dd83)

தேவையான பொருட்கள் :

சௌ சௌ – 2
தக்காளி – 1
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ¼ தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 6
கறிவேப்பிலை – 1 பிடி
உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை :

* சௌ சௌ, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சௌ சௌ, காய்ந்த மிளகாய், தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்.
* வதக்கியதை ஆறவிட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
* நான்ஸ்டிக் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விடவும்.
* விரும்பினால் ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
* சுவையான சத்தான சௌ சௌ சட்னி ரெடி.