FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: EmiNeM on June 07, 2016, 11:30:06 AM
-
சிறையென
உன் கனவினை
தடுத்திடும்
திரையினை
கிழித்தெறிந்து
புயலென
புகுவாய் நீ
இழி வார்த்தைப் பேசி
உன்னை அடிமைபடுத்திட
எண்ணிய
சில
ஆணவ ஆண்களை
மிதித்தபடி...
பூச்சூடிய
மாந்தரும்
புயலாய்
சீறிய வரலாற்றை
நீ அறிவாயோ
வலுவான
ஒவொரு ஆணையும்
படைத்ததிந்த
பெண்ணினம் தான்
என்று கர்வம் கொண்டு
புறப்படு
புது யுகம் படைக்க
-
புரட்சித்தீ பிழம்பாய் வரிகளில் !!
வாழ்த்துக்கள் !!
-
மிக்க நன்றி
-
பெண்மையைப் போற்றும் ஒரு கலைஞருக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்
-
~ !!! சூப்பர் .....!!! ~
~ !!! பெண்ணை
போற்றியே ஆண்குலமே
வாழ்த்துகள் ....!!! ~
~ !!! என்றென்றம்
நட்புடன் !!! ~
~ !!! ரி தி கா !!! ~ ;D ;D ;D ;D ;D ;D
-
பெண்மை என்பது மென்மை, பறவையின் இறகு கூட தோற்கும், தாயின் வருடலில்...!
பெண்மை என்பது உண்மை, பொய்யான பாசங்கள் கூட தோற்கும், தாயின் உண்மையான அன்பில்...!
பெண்மை என்பது கருணை, கடவுள் கூட தோற்றுபோவான், தாயின் கருணையில்...!
பெண்மை என்பது பெருந்தன்மை, தெய்வம் கூட மன்னிக்க மறுக்கும் தவறுகளை, தாய்மை மன்னிக்கும்...!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.lair2000.net%2FChinese_Dragon_Music%2FAnimation65.gif&hash=39502eb6e797ee91bac0c3bac43b9a357224a124)
supr ji super ji super ji!!!