FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 06, 2016, 11:50:33 PM
-
வாழைக்காய் தாளிப்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fko.jpg&hash=b8fddaca6d0ac2e3c8a2907c2841a2f740a59915)
தேவையானவை:
முற்றிய வாழைக்காய் – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிது, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வாழைக்காயைத் தோல் சீவி நீளவாக்கில் இரண்டாக வெட்டி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியைக் கரைத்து வடிகட்டி அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும், நறுக்கிய வாழைக்காயைப் போட்டு வேக வைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில், எண்ணெய் `காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வேக வைத்த வாழைக்காயை சேர்த்து கிளறி இறக்கவும்.