FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 06, 2016, 11:46:53 PM
-
பச்சை பயறு சூப்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fvup.jpg&hash=f692f1115fba9523a7977a8e41107de313c0b85b)
தேவையானப்பொருட்கள்:
பச்சை பயறு – 1/2 கப
உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) – 1
தக்காளி (நடுத்தர அளவு) – 1
எண்ணை அல்லது வெண்ணை – 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சை பயறை 4 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைத்து, கழுவி, தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
உருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியையும் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பிரஷர் குக்கரில் ஊற வைத்த பயறு, உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் போட்டு 2 முதல் 3 கப் வரை தண்ணீரைச் சேர்த்து 3 அல்லது 4 விசில் வரை வேக வைத்தெடுக்கவும்.
குக்கர் ஆறியவுடன், திறந்து வெந்தப் பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.
அடி கனமான் ஒரு பாத்திரத்தில் எண்ணை அல்லது வெண்ணையைப் போட்டு சூடானதும் பூண்டைச் சேர்த்து சிவக்க வதக்கவும். பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து அதையும் சிவக்க வதக்கவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள பயறு விழுதைப் போட்டு, தேவையான அளவு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வநததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் சூப்பை ஊற்றி, அதன் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவி, சோள சிப்ஸ் அல்லது கேரட் துண்டுகளோடு பரிமாறவும்.