FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 06, 2016, 11:37:37 PM
-
அவசரக்கூட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Fkoo-1.jpg&hash=ba92d6fbf688235665514f126ec664ad68336bc6)
தேவையானப்பொருட்கள்:
வீட்டிலிருக்கும் ஒன்றிரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட காய்கள் நறுக்கியது – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
எண்ணை – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
ஒரு குக்கரில், நறுக்கிய காய்கறி துண்டுகள், பயத்தம் பருப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைப்போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைத்தெடுத்து, கரண்டியால் சற்று மசித்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் சாம்பார் பொடியைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுக்கவும். (கருகி விடக் கூடாது). பின்னர் அதில் வேக வைத்துள்ளக் காயைக் கொட்டிக் கிளறி விட்டு, கடைசியில் உப்புச் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
பின்குறிப்பு: தாளிக்கும் பொழுது சாம்பார் பொடி சேர்ப்பதால் கூட்டு மணமாக இருக்கும். வீட்டிலுள்ள எந்த விதமானக் காய்களையும் உபயோகிக்கலாம். நான் இதில் அவரைக்காய், ஒரு சிறிய கத்திரிக்காய், ஒரு சிறிய உருளைக்குழங்கு (தோலுடன்)