(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.santhan.com%2Fimages%2Fmedicine%2Forange.jpg&hash=4b63a76b6fa702f979ce057463379c74af61a0ac)
எந்த வயதாக இருந்தாலும் பரவாயில்லை… எந்த நோயாளியாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழம் ஆரஞ்சு! இது உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உறுதியை வழங்குகிறது.
ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இளமை தோற்றம் உருவாகும்.
தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும். மலச்சிக்கலை நீக்கும். நன்கு ஜீரணமாகும். கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும்.
மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாகும். நெஞ்சுவலி, இதய நோய், எலும்பு மெலிவு ஆகியவற்றை குணமாக்கும் ஆற்றல் உடையது ஆரஞ்சு.
இதில் ஏ, பி, சி ஆகிய வைட்டமின்களும், ஏழு வகையான தாதுக்களும் உள்ளதால், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஆரஞ்சு பழத்தை குறுக்கே இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.