FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 02, 2016, 09:58:50 PM

Title: ~ சப்பாத்தி நூடுல்ஸ் ~
Post by: MysteRy on June 02, 2016, 09:58:50 PM
சப்பாத்தி நூடுல்ஸ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fchapati-noodles-cooking-tips-in-tamilchapati-noodles-samayal-kurippuchapati-noodles-in-tamilchapati-noodl-e1464708475367.jpg&hash=8a52c57bac02d4879356926769c8569f2f6ced08)

தேவையான பொருட்கள்:

 சப்பாத்தி – 4 முட்டைக்கோஸ் – 1/4 கப் (நீளமாக மெல்லியதாக நறுக்கியது) கேரட் – 2 (நீளமாக மெல்லியதாக நறுக்கியது) குடைமிளகாய் – 1 சிறியது (நீளமாக மெல்லியதாக நறுக்கியது) பூண்டு – 5 பற்கள் (பொடியாக நறுக்கியது) மிளகு தூள் – 1 டீஸ்பூன் சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன் தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

 முதலில் சப்பாத்தியை கத்தரிக்கோல் பயன்படுத்தி நூடுல்ஸ் போன்று நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் குடைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும். பின் வெட்டி வைத்துள்ள சப்பாத்திகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சப்பாத்தி நூடுல்ஸ் ரெடி!!!