FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on June 02, 2016, 09:56:14 PM

Title: ~ நூடுல்ஸ் சூ ~
Post by: MysteRy on June 02, 2016, 09:56:14 PM
நூடுல்ஸ் சூ

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fnoodles-soup-cooking-tips-in-tamilnoodles-soup-samayal-kurippunoodles-soup-in-tamilnoodles-soup-seimurai-e1464708717263.png&hash=0aa37b35bdc9a26cc376e1b3bb137503f7eee8ff)

ப்ளெயின் நூடுல்ஸ் & ஒரு பாக்கெட், காய்கறிக் கலவை & கால் கப், எண்ணெய் & கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் & அரை கப், மல்லித்தழை & சிறிதளவு, மிளகுத்தூள் & தேவையான அளவு, உப்பு & சுவைக்கேற்ப. சூப் செய்ய: கேரட் & 1, உருளைக்கிழங்கு & 1, சௌசௌ & பாதி, நூல்கோல் & பாதி, பெரிய வெங்காயம் & 1, சிகப்பு முள்ளங்கி (சிறியதாக) & 1, உப்பு & சுவைக்கேற்ப.

நூடுல்ஸை கொதிக்கும் நீரில் போட்டு, 2 நிமிடம் வேகவைத்து வடித்து, பிறகு சாதாரண
தண்ணீரில் நன்கு அலசி சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து,
வெங்காயத்தைப் பொன்னிறமாகப் பொரியும் வரை வறுத்தெடுத்து தனியே வையுங்கள். பொடியாக நறுக்கிய காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்து வேகவையுங்கள்.

சூப்புக்காகக் கொடுத்துள்ள பொருட்களில், காய்கறிகளை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி,
சிறிது உப்பும் 4 கப் தண்ணீரும் சேர்த்து குக்கரில் வேகவைத்து, ஆறியதும் காய்கறிகளைத் தனியே எடுத்து அரைத்துக்கொள்ளுங்கள்.

வேகவைத்த தண்ணீரில் அரைத்த விழுதை கலந்து வடிகட்டி,மீண்டும் கொதிக்கவிடுங்கள். (கொதிக்கும்பொழுது, விருப்பப்பட்டால் சிறிது அஜினோமோட்டோ
சேர்க்கலாம்). பரிமாறும்போது, சிறிய கப்களில் சிறிதளவு சூப், வேகவைத்த காய்கறி, நூடுல்ஸ்,
மிளகுத்தூள், பொரித்த வெங்காயம்.. எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போட்டு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சிறிது தூவிப் பரிமாறுங்கள்.