FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on January 26, 2012, 07:39:19 AM
-
நாம் உண்ணும் உணவு உடலுக்குள் செரிமானமாகி நமக்கு சக்தியை தர வேண்டும். உணவு
உண்பதே ஒரு கலை. உண்ணும் இலையைப் பொருத்து உணவின் சக்தி மாறுபடுகிறது. என்னென்ன
இலைகளில் சாப்பிடலாம்? எந்த இலைகளை தைத்து சாப்பிடலாம் என்ற விபரம் சாஸ்திர
நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. எந்த இலையில் உண்டால் என்ன கிடைக்கும் என்பது
பற்றி தெரிந்து கொள்வோம்.
வாழை இலை உணவு
வாழை இலைகளில் சாப்பிடுவது நாம் அறிந்த ஒன்று. பெரும்பாலான விருந்துகளில் வாழை
இலையில் உணவு பரிமாறப்படுகிறது. இலைகளில் வாழை இலையும் வேங்கை இலையும் சமமான
பலனை தரக்கூடியது..
வாழை இலையில் உணவு உண்பதால் அக்னி மாந்தம், வாய்வு, இளைப்பு, பித்தநோய்
போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாகும். வாழை இலையில் தொடர்ந்து உண்டு
வந்தால் தோல் மினுமினுப்பாகும். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஒளியையும்
கொடுக்கும். வாத பித்த கப நோய்கள் குணமாகும். உடலுக்கு வலிமையைத் தரும்.
ஆண்மையை வளர்க்கும்.. வயிறுமந்தத்தைப் போக்கும்.
பாலுள்ள வேறு மரங்களின் இலையில் உண்டு வந்தாலும் வாத, பித்த, கப நோய்கள்
நீங்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தாகத்தைத் தணிக்கும்.. பக்க வாதம்
குணமாகும். உடல் நடுக்கம் காசநோய் குணமாகும்.
தையல் இலைகள்
தையல் இலையை ஒரேவகையான இலையை தைத்து உருவாக்கி அதில்தான் சாப்பிடவேண்டும்.
மாவிலை, பின்னை இலை, பலாஇலை, தாமரை இலை, இலுப்பை இலை, செண்பக இலை, பாதிரிஇலை,
பலாசு இலை, சுரை இலை, கமுகமடல் ஆகிய இலைகளை உணவு உண்ணப்பயன்படுத்தலாம்..
இருப்பினும் பலா இலையில் அதிகமாக உணவு உண்பது கெடுதலையே தரும். பித்தத்தை
அதிகரிக்கும் தாமரை இலையில் உண்டால்; உடல் வெப்பம் அதிகரிக்கும். வாத நோய்
மந்தாக்கினியைத் தோற்றுவிக்கும். புரசம் இலையில் உண்பது வாத கபத்தைப் போக்கும்.
சயம், குன்ம நோயைப் போக்கும். உடலுக்கு சூட்டைத் தரும்