FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Yousuf on July 18, 2011, 11:31:54 AM

Title: அதிகப்பிரசங்கிகள்!!!
Post by: Yousuf on July 18, 2011, 11:31:54 AM
[ பெண்ணின் அந்தரங்கங்களை, அசராமல், அலுக்காமல் ஆலோசித்து சிலாகிப்பதுதான் பெண்ணியமா?
பெண்ணியம் பேசுகிறேன் பேர்வழியென பெண்கள் எல்லோரையும் ஆண்கள் போல் மாற்றிவிட்டால் ஆண்-பெண் வேறுபாடுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுமே?!
ஒரு ஆண் தன் அந்தரங்க உறுப்பு சம்பந்தமான பிரசினைகளை இன்னொரு பெண்முன் சொல்வது எப்படி அவனது மனைவிக்கு அசிங்கமாக, அறுவெறுப்பாக இருக்குமோ, அதுபோல்தான் பெண்கள் இப்படி பொது இடத்தில் தங்கள் உறுப்புக்களைப் பற்றி பேசுவதும் இருக்கும். அந்தரங்கங்களே தேவையில்லையென்றால் உடைகள் எதற்கு?
எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு சில பெண் புரட்சியாள காமெடியாளர்கள் எடுக்கும் ஆயுதம் மிகவும் கேவலமானது. பெண் விடுதலை என்பது பெண்கள் ஆண்கள் போல் திரிவதல்ல, பெண்கள் அடிமைகளாய் இராது 'பெண்'களாகவே வாழ்தல் என்பதுதான்.]


சமீபகாலமா ஒரு விஷயம் சில பெண்(?!) (அதிகப்பிரசங்கிகள்) எழுத்தாளர்களிடம் பிரபலமாகிக்கொண்டு வருகிறது. அதாவது ஆண்கள் மாதிரி ஜீன்ஸ் டி.ஷர்ட் அணிந்துகொண்டு, ஆண்களை திட்டிக்கொண்டு, ஆபாசக் கவிதைகள் எழுதிக்கொண்டு திரிவது என்பதுதான் அது.
கவிதை தொகுப்புகளுக்கு கொச்சையான பெயரை வைத்துவிட்டு, தாங்கள் ஏதோ ஆயிரம் வருடங்களாக அடிமைப்பட்டிருந்த பெண் இனத்திற்கு விடுதலை வாங்கிக்கொடுத்துவிட்ட பெண் போல் பேசிக்கொண்டு அலையும் கூட்டத்தைப் பற்றியே இந்தக் கட்டுரை!

பெண்ணின் அந்தரங்கங்களை, அசராமல், அலுக்காமல் ஆலோசித்து சிலாகிப்பதுதான் பெண்ணியமா? ஆனால் நம்மூரில் பெரியாரியம் பேசும் பெண்களில் 90% பேர், " ...... ..... ....." என பொதுக்கூட்டத்தில் சொல்வதும், அந்தரங்க உறுப்புக்களின் பெயரில் கவிதைத் தொகுப்புகள் எழுதுவதும், மற்றவர்களையும் தூண்டிவிடுவதுமாகத்தான் திரிகிறார்கள்.

என்றாவது பெண்களை கவர்ச்சி நடனம் ஆடவிட்டு கமர்ஷியல் சினிமா எடுக்கும் இயக்குனர்களை திட்டியிருக்கிறார்களா? பெண்களை போகப் பொருள் என உலகுக்கு எடுத்துக்காட்டும் 'சிறந்த' உவமைகளான நடிகைகளை கண்டித்திருக்கிறார்களா? 'Low hip' ஜீனில் உள்ளாடையின் வண்ணத்தை விளம்பரம் செய்துப் போகும் பெண்மணிகளை திட்டியிருக்கிறார்களா? இல்லையே! ஏனெனில் இவையெல்லாம் பரபரப்பான விளம்பரம் தரும் செயல்கள் அல்ல!!

இங்கு பிரச்சினை என்னவென்றால், 'எதற்காக அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பேசவேண்டும்?', என்பதுதான்! பெண்கள் கூடி உங்கள் விஷயங்களைப் பேசுங்கள். என்ன பிரச்சினை, எதனால் இப்படி, ஏன் அப்படியென ஆலோசியுங்கள். பொது இடங்களில் மேடை போட்டு கெட்ட வார்த்தை பேசுவது நாகரீகமே அல்ல.

ஆண்களையும் பெண்களையும் சமமாகக் கருதும் மேற்கத்தியர்கள் கூட "MEN ARE FROM MARS, WOMEN ARE FROM VENUS" என்ற கருத்தை ஏற்று கொண்டார்கள். அதாவது ஒரு ஆணுக்கும்- பெண்ணுக்கும் மனநிலையில் அவ்வளவு வித்தியாசங்கள் உள்ளனவாம். அந்த வித்தியாசங்கள் தான் ஆணையும், பெண்ணையும் இத்தனை லட்ச வருஷமும் கட்டிப் போட்டுக் காதலிக்க வைத்திருக்கிறதாம்.
ஆனால் பெண்ணியம் பேசுகிறேன் பேசுகிறேன் பேர்வழியென பெண்கள் எல்லோரையும் ஆண்கள் போல் மாற்றிவிட்டால் ஆண்-பெண் வேறுபாடுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுமே?!!

ஒரு ஆண் தன் அந்தரங்க உறுப்பு சம்பந்தமான பிரசினைகளை இன்னொரு பெண்முன் சொல்வது எப்படி அவனது மனைவிக்கு அசிங்கமாக, அறுவெறுப்பாக இருக்குமோ, அதுபோல்தான் பெண்கள் இப்படி பொது இடத்தில் தங்கள் உறுப்புக்களைப் பற்றி பேசுவதும் இருக்கும். அந்தரங்கங்களே தேவையில்லையென்றால் உடைகள் எதற்கு?

எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு சில பெண் புரட்சியாள காமெடியாளர்கள் எடுக்கும் ஆயுதம் மிகவும் கேவலமானது. பெண் விடுதலை என்பது பெண்கள் ஆண்கள் போல் திரிவதல்ல, பெண்கள் அடிமைகளாய் இராது 'பெண்'களாகவே வாழ்தல் என்பதுதான்.

சில விஷயங்கள் பொது இடத்துக்கு விவாதப் பொருளாக வராமலிருப்பதுதான், ஆணுக்கு பெண் மீது உள்ள ஈர்ப்பையும், பெண்ணுக்கு ஆண் மீது உள்ள ஈர்ப்பையும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

அதனால் விளம்பரத்துக்காக மேடைகளில் ஆபசமாய் பேசியும், கவிதைகளில் கண்டது கழியதை எழுதியும், கவிதை தொகுப்புகளுக்கு அசிங்கமாக பெயர் வைத்தும் அலையும் பெண்களை "பொது இடத்தில் ஆபசமாய் நடப்பதற்காக அல்லது நடந்ததற்காக ஏன் கைது செய்ய கூடாது?

இதையெல்லாம் கேட்கமாட்டோம்! நாங்கள் இப்படித்தான் செய்வோம் என அலைபவர்கள் அலையுங்கள். ''பெண் சுதந்திரம் என்னும் பெயரில் பெண்கள் எல்லோரும் தெருவில் வந்து கெட்ட வார்த்தை பேசுங்கள். ஜாலியாகவும், காதுக்கு இனிமையாகவும் இருக்கும், அப்படியே இலவச இணைப்பாக பெண் சுதந்திரமும் கிடைக்கும்....!'' என்று நினைக்கும் ஆண்களாயினும், பெண்களாயினும் சந்தேகமில்லமல் வக்கிறபுத்தி படைத்தவர்களே! பெண்ணியம் குறித்த சரியான பார்வையோடும், முதிர்ந்த கருத்தோடும் இயங்குகிறவர்கள் என்று ஒரு சிலரை மட்டுமே என்னால் அடையாளம் காண முடிகிறது. ஏனைய பெண்ணியவாதிகள் ஒரு போலியான கற்பிதம் செய்யப்பட்ட பெண்ணிய நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தார்கள். அல்லது உடலியல் ரீதியிலான குறியீட்டு விமர்சனங்களில் மூழ்கிப் போயிருந்தார்கள், தங்கள் உடலமைப்பு தங்கள் வளர்ச்சியை முற்றிலும் தடுக்கும் ஒரு புறக்காரணி என்று சுய அனுதாபம் தேடக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.
Title: Re: அதிகப்பிரசங்கிகள்!!!
Post by: Global Angel on July 18, 2011, 10:09:27 PM
சில விஷயங்கள் பொது இடத்துக்கு விவாதப் பொருளாக வராமலிருப்பதுதான், ஆணுக்கு பெண் மீது உள்ள ஈர்ப்பையும், பெண்ணுக்கு ஆண் மீது உள்ள ஈர்ப்பையும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.


nichiyamana unayana varikal...nalla thokuppu usuf
Title: Re: அதிகப்பிரசங்கிகள்!!!
Post by: Yousuf on July 18, 2011, 10:35:57 PM
நன்றி ஏஞ்செல்...!!! :) :) :)