FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 25, 2016, 10:06:49 PM

Title: ~ டிப்ஸ் தமிழ் சமையல் ~
Post by: MysteRy on May 25, 2016, 10:06:49 PM
டிப்ஸ் தமிழ் சமையல்

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/v/l/t1.0-9/13263752_1575572199406916_8370274672559798592_n.jpg?oh=13c501076ac963bfaef3b897a23a24b3&oe=579BCB83)

பச்சை மிளகாய்களை மிக்ஸ்யில் அரைக்கும் போது துண்டுகளாக்கி போட்டாலும் பல சமயங்களில் நைஸாக அரைபடாமல் அப்படியே ந்றுக் நறுக்கென்று இருக்கும். மிளகாய்களை நீளவாக்கில் இரண்டாக வெட்டி அரைத்தான் நன்றாக மசிந்துவிடும்.

எலுமிச்சம்பழங்களை பயன்படுத்தியதும் அவற்றின் தோலை தூக்கி எறியாதீர்கள். அவற்றின் மேல் சிறிது உப்பு தடவி குக்கரில் வேக விடுங்கள். பிறகு வெளியே எடுத்து நல்லெண்ணெயில் கடுகு பெருங்காயம் தாளித்து மிளகாய்த்தூள் சேர்த்தால் சிக்கன செலவில் சூப்பர் ஊறுகாய் ரெடி.

விருந்தினர்களுக்கு ஃபில்டர் காப்பி கொடுக்கும்போது பொங்கி வழியும் நுரையுடன் கொடுக்க வேண்டுமானால் ஒரு கப் ஃபில்டர் காபியில் ஒரு சிட்டிகை தரமான இன்ஸ்டன்ட் காபி பவுடரையும் கலந்து ஒரு ஆற்று ஆற்றி கப்பில் ஊற்றிக்கொடுத்தால் பார்க்க அழகாக இருப்பதுடன் மேலே ஆடைபடியாமலும் இருக்கும்.Saffronபாயசம் இனிப்பு வகைகள் செய்யும்போது குங்குமப்பூ சேர்ப்போம். பால் அல்லது தண்ணீரை விட்டுக் கரைக்கும்போது குங்குமப்பூ லேசில் கரையாது. வாணலியை சூடாக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். அந்த வாணலியில் குங்குமப்பூவைப் போட்டு சில நொடிகள் புரட்டினால்……….. மொறு மொறுவென்று ஆகிவிடும். அதைக் கையால் நொறுக்கி பவுடராக்கி டப்பாவில் எடுத்து வைத்துக்கொண்டால் தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்தலாம்.