FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 25, 2016, 09:54:49 PM
-
பாஸ்தா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fpas.jpg&hash=a0fc8b8cae7718d9aff0046991df3ffa0eda5202)
தேவையானவை:
ஃபெட்டுஷினே பாஸ்தா – ஒரு பாக்கெட்,
தக்காளி – 6,
பூண்டு – 3 பல்,
பாலக்கீரை – ஒரு கட்டு,
தயிர் – ஒன்றரை கப்,
க்ரீம் – ஒரு கப்,
தக்காளி சாஸ் – தேவைக்கேற்ப ,
சர்க்கரை – தேவைக்கேற்ப ,
மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப ,
மிளகுத்தூள் – தேவைக்கேற்ப.
செய்முறை:
பாஸ்தாவை வேகவைத்து வடித்துக்கொள்ளவும் (வேகவைத்த தண்ணீரை சேமிக்கவும்). தயிரை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து, க்ரீமுடன் கலந்து தனியாக வைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய பூண்டு, தக்காளியை சேர்க்கவும். தக்காளி வதங்கியதும்.
தக்காளி சாஸ், சர்க்கரை, மிளகாய்த்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு தயிர் கலவையை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, நறுக்கிய பாலக்கீரையை சேர்க்கவும், தேவைப்பட்டால் பாஸ்தா வேகவைத்த தண்ணீரை சேர்க்கவும்.
கீரை சற்று வெந்ததும், பாஸ்தா சேர்த்து சூடாக பரிமாறவும்.