FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 25, 2016, 09:34:44 PM
-
நூடுல்ஸ் வறுவல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fnudu-e1458969969523.jpg&hash=69ff8bf95ea3f155215c3df2f71d75147d765a13)
நூடுல்ஸ் – 200 கிராம்
முட்டைக்கோஸ் – 200 கிராம் (மெல்லியதாக நறுக்கவும்)
கேரட் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)
குடைமிளகாய் – 2 (சிறுத் துண்டுகளாக நறுக்கவும்)
தக்காளி சாஸ் – ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி
சில்லி சாஸ் – ஒரு தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 4 தேக்கரண்டி
சர்க்கரை – அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நூடுல்ஸை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும். முழுவதுமாக வேக விட வேண்டாம்.
பிறகு வெந்த காய்கறி கலவையோடு உப்பு, மிளகுத் தூள், தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், சர்க்கரை கலந்து மீண்டும் ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். கொதித்ததும் கார்ன் ஃப்ளாரை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
கடைசியாக வறுத்து வைத்திருக்கும் நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறி கெட்டியானதும் இறக்கவும்.
சுவையான நூடுல்ஸ் வறுவல் தயார்.