FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 25, 2016, 09:29:38 PM
-
சுவையான ரோல்ஸ் (Rolls)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Frolls.jpg&hash=043001dbf5b57ebacb7e367c458612bc771a0fd5)
மைதா மாவு
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
உருளைக்கிழங்கு – ஒன்று
பச்சை பட்டாணி – ஒரு கைப்பிடி [விரும்பினால்]
கறிவேப்பிலை
இஞ்சி, பூண்டு – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
எலுமிச்சை – அரை பாகம்
முட்டை – ஒன்று
ப்ரெட் க்ரம்ப்ஸ் – தேவைக்கு
எண்ணெய் – தேவைக்கு
ஸ்மோக்டு டூனா – சிறிது [விரும்பினால்]
மீன், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும். உருளையை வேக வைத்து மசிக்கவும். பட்டாணியை வேக வைத்து எடுக்கவும். மைதா மாவை உப்பு கலந்து தேவையான நீர் விட்டு பிசைந்து வைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
இதில் வேக வைத்த உருளை, பட்டாணி சேர்த்து மஞ்சள் தூள், உப்பு கலந்து சிறிது நேரம் வதக்கவும். கடைசியாக எலுமிச்சை சாறு கலந்து எடுக்கவும்.
பிசைந்து வைத்த மாவில் உருண்டைகள் செய்து அதை சின்னதாக திரட்டி அதன் உள்ளே சிறிது உருளை கலவை வைத்து ரோல் செய்யவும்.
சிறிது மைதா மாவை நீரில் கரைத்து வைத்து கொண்டு ரோல் எல்லா பக்கமும் நன்றாக மூடும் படி மைதா மாவை தடவி ஒட்டி விடவும். முட்டையை சிறிது உப்பு கலந்து அடித்து கொண்டு அதில் ரோல் ஒவ்வோன்றாக பிரட்டி எடுத்து ப்ரெட் க்ரம்ப்ஸில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவையான ரோல்ஸ் தயார்.