FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 22, 2016, 09:59:57 PM
-
ஐயங்கார் வரகு அரிசி பொங்கல்
தேவையான பொருட்கள் :
வரகு அரிசி : 1 டம்ளர்
ப.பருப்பு : 1 கைப்பிடி
இஞ்சி : சிறிய துண்டு
மிளகு : 1 டி ஸ்பூன்
சீரகம் : 1 டி ஸ்பூன்
பெருங்காயப்பொடி : 1 டி ஸ்பூன்
கருவேப்பிலை : 2 ஆர்க்கு
நெய் : தேவையான அளவு
உப்பு : ருசிகேற்ப
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2FVaragu-Arisi-Pongal-iyengar-styleVaragu-Arisi-Pongal-samayal-seivathu-eppadiVaragu-Arisi-Pongal-seimuraiVaragu-Arisi-Pongal-tamil-nadu-recipe-e1446015599918.jpg&hash=7fc653a0b1de3f2bbb96f35a77d113702bf39b1f)
செய்முறை :
வரகு அரிசி, ப.பருப்பு இரண்டையும் நன்றாக களைந்து குக்கரில் போட்டு 4 டம்ளர் தண்ணீர் விடவும்.
அதனுடன் இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும்.
குக்கரை திறந்து ஒரு கரண்டியால் நன்றாக கிளறவும்.
நெய்யில் மிளகு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயப்பொடி சேர்த்து தாளிக்கவும்.
தாளித்ததை பொங்கலில் விட்டு உப்பு சேர்த்து கிளறவும்.
வரகு அரிசி பொங்கல் ரெடி. தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.