FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 22, 2016, 09:49:45 PM
-
பிராமண கதம்ப சாம்பார்
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு : 1 டம்ளர் (மஞ்சள் பொடியுடன் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்)
மஞ்சள் பொடி : 1 டி ஸ்பூன்
புளி : 1 எலுமிச்சை அளவு (கரைத்துக்கொள்ளவும்)
சாம்பார் பொடி : 1 1/2 டி ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
காய்கறிகள் : கலவையாக 1/4 கிலோ நறுக்கிக்கொள்ளவும் – (அவரைக்காய், பரங்கிக்காய், பூசணிக்காய், பீன்ஸ், சர்க்கரை வள்ளிகிழங்கு, காரட், குடை மிளகாய்)
மொச்சை or பட்டாணி : 1 கப்
வறுத்து அரைக்க :
மிளகாய் வற்றல் : 5 Nos
தனியா : 2 டி ஸ்பூன்
கடலை பருப்பு : 2 டி ஸ்பூன்
பெருங்காயம் : 1 துண்டு
வெந்தயம் : 1 டி ஸ்பூன்
தேங்காய் : 1/2 மூடி
எண்ணை : தேவையான அளவு
கடுகு : 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை : சிறிது
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2FKadamba-Sambar-seivathu-eppadiKadamba-Sambar-recipe-cooking-tips-in-tamil-tamil-iyangar-samayal-kurippugaliyar-cooking-tips-tamil-nadu-e1446013595159.jpg&hash=cae8705550032f4939135210b8819d3ee1cf11cc)
செய்முறை :
நறுக்கிய காய்கறிகளை 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக வைத்துக்கொள்ளவும்.
பிறகு அதில் புளி தண்ணீர், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
10 நிமிடம் கொதித்தவுடன் அதில் வெந்த பருப்பு சேர்க்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கவும்.
கடுகு தாளித்து கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்