FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 22, 2016, 09:32:04 PM
-
பிராமண சமையல் குருமா
தேவையான பொருட்கள் :
பீன்ஸ், காரட், உருளை கிழங்கு, நூல்கோல் : 1/2 கிலோ எல்லா காய்கறிகளும்
1 inch சைசில் கட் பண்ணியது
வெங்காயம் : 2 Nos.
தக்காளி : 2 Nos.
கசகசா : 1 டி ஸ்பூன் (வெந்நீரில் ஊற வைக்கவும்)
தேங்காய் துருவல் : 2 டேபிள் ஸ்பூன்.
இஞ்சி : 1 துண்டு
பூண்டு : 10 பல்
பச்சை மிளகாய் : காரத்திற்கு ஏற்ப
தேவையானால் முந்திரி பருப்பு : 10 (ஊறவைத்து அரைக்கவும்).
உப்பு : தேவையான அளவு
மஞ்சள் பொடி : 1 டி ஸ்பூன்
கொத்தமல்லி பச்சை : சிறிதளவு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fbrahmin-kuruma-recipe-cooking-tips-tamilbrahmin-recipe-in-tamil-brahmin-samayal-kurippubrahmin-tamil-recipes-e1445964432234.jpg&hash=aaf947d275ca3ceb4b99a2d08e6ad0e4b3bc0ddb)
செய்முறை :
காய்கறிகளை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.
வெந்நீரை வடிகட்ட வேண்டாம்.
வெங்காயத்தை சிறிது எண்ணை விட்டு வதக்கி அதனுடன் கசகசா, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து பேஸ்டாக அரைத்து வெந்தகாயுடன் சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பிறகு தக்காளி சேர்த்து கொதிக்கவிடவும்.
முந்திரி பேஸ்ட் சேர்த்தால் கொஞ்சம் rich ஆக இருக்கும்.
எல்லாம் கொதித்து சேர்ந்து வரும்பொழுது பச்சை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
சாதத்துடன் சேர்த்து சாப்பிட அல்லது சப்பாத்தி/பூரியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.