FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 22, 2016, 09:16:57 PM

Title: ~ ஐயங்கார் பனீர் சப்பாத்தி ரோல் ~
Post by: MysteRy on May 22, 2016, 09:16:57 PM
ஐயங்கார் பனீர் சப்பாத்தி ரோல்

தேவையான பொருட்கள் :

சப்பாத்தி – 2,

பனீர் – அரை கப் (துருவியது),

வெங்காயம் – ஒன்று,

பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் ( இரண்டும் சேர்த்து) – அரை கப்,

கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,

உப்பு, நெய் – தேவையான அளவு.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fpaneer-chapati-roll-recipe-iyengar-in-tamilcooking-tips-in-tamil-paneer-chapati-roll-recipe-iyengartamil-samayal-kurippu-paneer-chapati-roll-recipe-iyengar.jpg&hash=c02f714dcb4c8c2d4c446b9fb649e87427d5ebae)

செய்முறை :

• ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும்… பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் சேர்த்து வதக்கவும்.

• பின்னர் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி… துருவிய பனீர் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும்.

• சப்பாத்திக்குள் பனீர் கலவையை வைத்து சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

• தக்காளி சாஸ், ராய்தா இதற்கு ஏற்ற சைட் டிஷ்.