FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 22, 2016, 09:09:46 PM
-
கரிசலாங்கண்ணி துவையல்
தேவையான பொருட்கள்:
கரிசலாங் கண்ணிக் கீரை – ஒரு கட்டு (200 கிராம்),
மிளகாய் வற்றல் – 8,
எலுமிச்சை – 2,
நெய் -2 ஸ்பூன்,
உப்பு- தேவையான அளவு.
செய்முறை:
கீரையைச் சுத்தம் செய்து உலர வைத்து, வாணலில் போட்டுச் சிறிது நெய்விட்டு வதக்கவும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fkarisalankanni-thuvaiyalkarisalankanni-thuvaiyal-recipe-in-tamil-tamil-mooligai-samayal-.jpg&hash=95323732e208ba490e875263896b1498969ef3a1)
மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளிப்போட்டுத் தனியே வறுத்து, அத்துடன் உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்து, கீரையும் சேர்த்து வதக்கி இறக்கவும்.
இதைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால், ரத்த சோகை குணமாகும். தலைமுடி நீளமாக வளரும்.