FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 22, 2016, 09:04:55 PM
-
புளி உப்புமா
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு : 1 டம்ளர்
புளி : 1 எலுமிச்சை அளவு (1 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்)
கடுகு : 1 டி ஸ்பூன்
உ.பருப்பு : 1 டி ஸ்பூன்
பெருங்காயம் : 1 சிறு துண்டு
உப்பு : தேவையான அளவு
மோர் மிளகாய் : 8 to 10 Nos. (அவரவர் காரத்திற்கேற்ப)
எண்ணை : 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் : 1/2 டம்ளர்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fpulima-brahmin-samayal-kurippubrahmin-upma-seivathu-eppadibrahmin-upma-tips-in-tamilbrahmin-upma-cooking-tipsbrahmin-recipes-in-tamil-e1446014836631.jpg&hash=0efebc8f8664a9a74fe62ca019a0a049bf2e8934)
செய்முறை :
புளி தண்ணீருடன் அரிசி மாவு, உப்பு, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, கடுகு, மோர் மிளகாய், உ.பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு கலந்த மாவை அதில் சேர்த்து அடுப்பை நிதானமான தீயில் வைத்து கிளறவும்.
மாவு வெந்து கையில் ஒட்டாமல் உதிர் உதிராக வரும்.
அப்பொழுது இறக்கவும். சுவையான புளி உப்புமா ரெடி.