FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 22, 2016, 08:43:51 PM

Title: ~ வெஜ்-ரைஸ் கிச்சடி ~
Post by: MysteRy on May 22, 2016, 08:43:51 PM
வெஜ்-ரைஸ் கிச்சடி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fveg-rice-khichdi.jpg&hash=9dba00baac8d2d7d5457382de94613f2083bcaca)

வெஜ்-ரைஸ் கிச்சடி தேவையான பொருட்கள்

அரிசி ரவை                                             – 50 கிராம்
கேரட்                                                          – 1
பீன்ஸ்                                                        – 10
தக்காளி                                                    – 1
பெரிய வெங்காயம்                           – 1
பச்சைமிளகாய்                                   – 2
மஞ்சள் பொடி                                      – 1/4 டீஸ்பூன்
இஞ்சி                                                        – சிறிது
பூண்டு                                                       – 2 பல்
பட்டை, சோம்பு, ஏலம்,
கிராம்பு பொடி                                      – 1 டீஸ்பூன்
எண்ணெய்                                            – 2 டீஸ்பூன்
புதினா, உப்பு                                        – தேவையான அளவு

வெஜ்-ரைஸ் கிச்சடி செய்முறை

வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அரிசி ரவையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி,பூண்டை தட்டிக் கொள்ளவும்.
மற்றொரு டீஸ்பூன் எண்ணெயை விட்டு மசாலா சாமான்களை போட்டு தாளித்து பின்னர் இஞ்சி, பூண்டைப் போடவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அரிசி ரவையையும் சேர்க்கவும்.
புதினா இலையைப் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். மஞ்சள் பொடி போடவும்.
நறுக்கி வைத்துள்ள காய்கறிகளையும் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும்.
வெந்ததும் இறக்கி கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.