FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 22, 2016, 08:22:45 PM

Title: ~ மஷ்ரூம் சூப் ~
Post by: MysteRy on May 22, 2016, 08:22:45 PM
மஷ்ரூம் சூப்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2F1-Cream-of-Mushroom-Soup-7-1-of-1-e1463669410740.jpg&hash=3ff69f780f2b366d8f3d9c6561ee750abfe86cbd)

தேவையான பொருட்கள்:

மீடியம் சைஸ் மஷ்ரூம் – 3
எண்ணெய் – 1/2 டீ ஸ்பூன்
மைதா –  1-1/2 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1/4 டீ ஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன்
சோளமாவு – 2 டீ ஸ்பூன்
உப்பு –  1/2 ஸ்பூன்
 
செய்முறை:

* மஷ்ரூமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* சோள மாவு, மிளகுத் தூளை தனித்தனியே சிறிது தண்­ணீரில் கலந்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு மைதா மாவைப் போட்டு வறுத்து, மூன்று கப் தண்ணீ­ர் விட்டு கொதிக்க விடவும்.
* இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது நறுக்கிய மஷ்ரூமை போட்டு நன்றாக வெந்ததும் கரைத்த சோளமாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.