FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 22, 2016, 08:14:34 PM
-
சோயா கார்ன் ஃப்ளேக்ஸ் குலாபி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fvvv-2.jpg&hash=9868c473d33d08d2589b0549159a5122c253cdc8)
தேவையானவை:
சோயா உருண்டைகள் (மீல் மேக்கர்) – 10, கார்ன் ஃப்ளேக்ஸ் – 2 கப், மிகவும் பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் இரண்டும் சேர்த்து – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சைப் பட்டாணி – கால் கப் (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்த விழுது – ஒரு டீஸ்பூன், மைதா – கால் கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
சோயா உருண்டைகளை கொதிக் கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டு எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி நீரை ஒட்டப்பிழிந்து மிக்ஸியில் அரைத்து உதிர்த்துக் கொள்ளவும். உதிர்த்த சோயாவுடன் பொடியாக நறுக்கிய கேரட், கோஸ், வெங்காயம், மசித்த பச்சைப் பட்டாணி, இஞ்சி – பூண்டு – பச்சை மிளகாய் விழுது, மைதா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசிறி (சிறிது நீர் தெளித்துக் கொள்ளலாம்) உருண்டைகளாக்கி, பொடித்த கார்ன் ஃப்ளேக்ஸ் தூளில் நன்கு புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.