FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 22, 2016, 08:00:59 PM
-
ஓட்ஸ் ஆலு கட்லெட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fods-1.jpg&hash=c75317c5dea8e52c94558df52c74a89f6c4a8c48)
தேவையானவை :
ஓட்ஸ் – ஒரு கப் (மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும்), பிரெட் ஸ்லைஸ்கள் – 6, உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து, தோலுரித்து மசிக்கவும்), பச்சை மிளகாய் – 4 (மிகவும் பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, மைதா – ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள் அல்லது ரஸ்க் தூள் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
பிரெட் துண்டுகளைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து… பொடித்த ஓட்ஸ், மசித்த உருளை, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, சிறிய உருண்டைகளாக்கவும். மைதாவை தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். உருண்டைகளை விரும்பிய வடிவத்தில் தட்டி, மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் அல்லது ரஸ்க் தூளில் புரட்டவும். தவாவை சூடாக்கி அதன் மேல் கட்லெட்டுகளை வைத்து இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிரெட் தூளில் புரட்டிய கட்லெட்டுகளை சேர்த்து பொரித்தும் எடுக்கலாம்.